மீண்டும் வதந்தி : பூமிகா அதிர்ச்சி!
பூமிகா, கணவர் பரத்தை விவாகரத்து செய்கிறார் என்று வந்த கிசுகிசுக்களை ஏற்கனவே பூமிகா மறுத்த நிலையில் டோலிவுட்டில் மீண்டும் அதே கிசுகிசு பரவி இருக்கிறது. இது குறித்து பூமிகா கூறியது: இதுபோன்ற வதந்தி எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே நான் சோர்வடைந்துவிட்டேன். எனக்கும், பரத்துக்கும் உறவு ஸ்டிராங்காக இருக்கிறது. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி-ராஜு, மலாய்கா-அர்பாஸ் ஆகிய தம்பதிகளும் பிரிந்துவிட்டதாக எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘இன்னும் நடிக்க வராதது ஏன்?Õ என்று கேட்கிறார்கள். நடிப்புக்கான இடைவெளி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. சிறு இடைவெளிக்கு பிறகு நடிக்கும் வேடம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். வெறும் கிளாமர் வேடங்களை ஏற்க விருப்பமில்லை. இப்போது ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. எல்லாம் சரியாக வந்தால் வரும் ஆகஸ்ட் முதல் ஷூட்டிங். அது காமெடி கதை படம்.

Post a Comment