Header Ads

விளையாட்டு செய்திகள்-ஜூலை 3

கவாஸ்கரின் சாதனையை முறியடித்த சங்கக்காரா
பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் என்ற முன்னாள் இந்திய அணித்தலைவர் சுனில்
கவாஸ்கரின் சாதனையை, இலங்கை வீரர் குமாரா சங்கக்காரா
முறியடித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சப்பாத்து இல்லாமல் கஷ்டப்படும் இந்திய வீரர்கள்
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 5 வீரர்கள் நடைபந்தயம் மற்றும் மாரத்தானில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மோதிய டி20 தொடர் மழையால் சமன் ஆனது
மேற்கிந்திய தீவுகள் 'ஏ' இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் முடிந்தது.
ஐ.பி.எல் என்பதே பெரிய விருந்து: ஜெஸ்சி ரைடர்
ஐ.பி.எல் தொடர் என்றாலே பார்ட்டியும், அதனுடன் இலவச மது விநியோகமும் இல்லாமல் இருக்காது என்று நியூசிலாந்து வீரர் ஜெஸ்ஸி ரைடர் தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்குள் நுழைந்த செரினா, வெளியேறிய ஷரபோவா
விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினார்.
தந்தையாகிறார் பிரபல கால்பந்து வீரர் பொலட்டலி
மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் பிரபல கால்பந்து வீரர் மரியோ பொலட்டலி குழந்தைக்கு தந்தையாகப் போகிறார்.
டெஸ்ட் தொடர்: சதம் கடந்த டில்ஷன், சங்கக்காரா
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 551 ஓட்டங்கள் இமாலய இலக்குடன் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
கர்னல் பதவியேற்கும் முதல் இந்தியப் பெண்
இந்திய ராணுவத்தின் கவுரவ “லெப்டினன்ட் கர்னல்” பதவி பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையை குத்துச்சண்டை நட்சத்திரம் மேரி கோம் பெறவுள்ளார்.

No comments

Powered by Blogger.