உலகின் அதிவேக இணைய சேவை
இண்டர்நெட் பயன்படுத்தும் எல்லோரையுமே எரிச்சலடையச் செய்யும் ஒரு விஷயம் அதன் ஆமை வேகம் தான்.குறிப்பாக ஒரு கிரிக்கெட் போட்டியை ஆன்லைனில் பார்த்தால் அதன் உண்மை புரியும்.அல்லது இணையத்தில் அதிக எடை கொண்ட பைல்களை எற்றவோ,இறக்கவோ செய்தால் கூட கண்டுபிடித்து விடலாம்.
டவுன்லோடு செய்யும்போது நகத்தை கடித்து கடித்து கையையே கடித்து விடுபவர்களை குஷிபடுத்தும் செய்தியை கூகுள் அறிவித்துள்ளது.உலகிலேயே அதி வேக பிராட்பேண்ட் சேவையை இந்நிறுவனம் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விட்டுள்ளது.
இப்போதைக்கு நம்ம ஊரில் சாதாரண பிராட்பேண்ட் வேகம் 256 kbps முதல் மூன்று mbps வரை தான். கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் பிராட்பேண்ட் வேகமோ ஒரு GBps.அதாவது தோராயமாக ஆயிரம் மடங்கு அதிக வேகம் கொண்டது.
இந்த வேகம் இருந்தால் இணையத்திலிருந்து ஒரு படத்தை டவுன்லோடு செய்ய அதிகபட்சம் ஒன்றோ,இரண்டோ நிமிடமே போதுமானது.இணையத்தில் எந்த நேரடி ஒளிபரப்பு காட்சியையும் தங்கு தடையில்லாமல் பார்க்கலாம்.இணையத்தில் மிகப்பெரிய பைல்களை வினாடிகளில் அனுப்பலாம்.டவுன்லோடு செய்யலாம்.ஒரு நூறு mb பைலை அனுப்ப பத்து வினாடிகளே போதும்.
இந்த வசதி சாதாரண தொலைபேசி இணைப்பு வழியாக வழங்கப்படாமல் பைபர் ஆப்டிக் வயர்களை வீடுகளில் இணைப்பதன் மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.ஹைபிராட்பேண்ட் வசதி வீடியோ சேட்டிங்,குழு சேட்டிங்,போன்றவைகளுக்கும்,இணைய குழுக்களுக்கும் வரப்பிரசாதமாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருட்டு வீடியோ டவுன்லோடு செய்பவர்கள் ஒரு நிமிடத்தில் ஒரு படத்தை டவுன்லோடு செய்து விட்டு ஓடிவிடலாம் என்பது மட்டுமே திரையுலகம் கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம்.
Post a Comment