தேனின் மகத்துவம்
தேன் சிறப்பான உணவு.எளிதில் செரிமானம் ஆகக்கூடியது .ஒரு கூட்டு குடும்பமாக மிகப்பெரிய நிர்வாக வசதியோடு ஆட்சி செய்து வருவது தேனீக்கள்.இராணித்தேனீ,காவல் தேனீ,வேலைக்காரத் தேனீ,மருத்துவ தேனீ,ஆண் தேனீ போன்ற பலதுறை சம்பந்தப்பட்ட தேனீக்கள் தேனாடையில் உள்ளன.
- அதிநுட்பமான நுண்ணறிவு கொண்டவை தேனீக்கள்.
- நிமிடத்திற்கு 16000 தடவைக்குமேல் இறகை அடித்துக்கொள்ளும்.
- சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை நுகர்ந்து தெரிந்து கொள்ளமுடியும்.
- ஒரு தேனீக்கு 5000 நாசித்துவாரங்கள் உள்ளன.
- சுமார் ஒரு தேக்கரண்டி தேனை சேகரிக்க தனது வாழ்வையே கொடுக்கிறது.
- ஒரு பவுண்டு தேனை சேகரிக்க எறக்குறைய 80000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.
- 60000 மலர்களுக்கு முப்பத்தேழு லட்சம் தடவை தேனீக்கள் பறந்து செல்ல வேண்டியிருக்கிறது.
தேனின் சத்துப்பொருட்கள்:
தேனில் பொதுவாக முப்பத்திநான்கு சதவிதம குளுக்கோஸ்,நாற்பது சதவிதம் பழச்சர்க்கரையும்,இரண்டு சதவிதம் மற்ற சர்க்கரை வகையும் அடங்கிஉள்ளன.கெட்டுப்போகாத ஒரு உணவு.
[புலால் உணவில் தான் அதிகமான அளவு சத்துகள் இருப்பதாக பெரும்பாலான கருத்தியல் வாதங்கள் நிலவுகின்றன.புலால் உண்பதினால் என்ன உடல் மாற்றத்தை எதிர் பார்கிரீர்களோ அதை தேன் சாப்பிடுவதால் அடைந்து விடலாம்.]
தேனின் சிறந்த பயன்கள்:
- கண்களுக்கு குளிர்ச்சி தரும்
- காயங்களை ஆற்றும்
- உடலுக்கு நல்ல நிறம் தரும்
- நாடிகளைச் சுத்தப்படுத்தும்
- அறிவை வளர்க்கும்
- சுவாசக் கோளாறு நீங்கும்
- வயிற்றுக்கடுப்பு,கிருமிநோய்,தாகம்,வாந்திபேதி நீங்கும்
- தீப்புண்,விக்கல்,மலச்சிக்கல் குணமாகும்
- பசியை ஏற்படுத்தும்
- ஜீரணத்துக்கு உதவும்
- கொழுப்பை கரைக்கும்
- மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.
- வாய்ப்புன்னுக்கு நல்லது
- நீரழிவு நோய் நீங்கும்
- வெட்டுக்கயங்களில் தேனை தடவினால் விரைவில் ஆரும்
- தேள் கொட்டிய இடத்தில் தேனை தடவினால் எரிச்சல் குறையும்.
- இதயம் பலமாகும். தேனாடையில் படிந்திருக்கும் தேனின் மெழுகை நன்றாய் மென்று விழுங்கினால் ஆஸ்மாவிற்கு நல்லது.
- மூச்சித்திணறலை எளிதில் நீக்கும்.
எனவே தேனை சரியாக பயன் படுத்தி பயன் பெறுங்கள். நலம் பெருகட்டும். படைப்பு - க.ராஜா (MA,M.Phil,B.Ed)
திருநெல்வேலி
Post a Comment