பல கோடி ரூபாய் செலவில் கட்டிய ஆடம்பர பங்களா-சச்சின்
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் புதிதாக கட்டியுள்ள 5 மாடி ஆடம்பர பங்களாவில் குடியேறினார். மும்பை பாந்த்ரா கலாநகரில¢ உள்ள ‘லேமர் அபார்ட்மென்ட்’டில் சச்சின் குடியிருந்து வந்தார். இதை அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் மகாராஷ்டிரா அரசு வழங்கியது. அந்த வீட்டில் இருந்து கொண்டே, பாந்த்ரா மேற்கு பெரி கிராஸ் ரோடு பகுதியில் ரூ. 39 கோடியில் பழைய பங்களா ஒன்றை சச்சின் வாங்கினார்.
பின்னர் அதை இடித்து விட்டு 5 மாடிகள் கொண்ட புதிய ஆடம்பர பங்களாவை பல கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளார். இந்த பங்களாவின் முதல் மாடியும், 2வது மாடியின் பாதியும் நிலத்துக்கு கீழ் கட்டப்பட்டுள்ளன. சச்சின் கார் பிரியர் என்பதால் நிலத்துக்கடியில் இருக்கும் 2வது தளத்தில் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல் மாடியில் சமையல் அறை, கண்காணிப்பு அறை மற்றும் வேலைக்காரர்கள் தங்கும் அறைகள் இருக்கின்றன. தரை தளத்தில் பெரிய வரவேற்பு அறை, சச்சின் குடும்பத்தினரின் பிரத்யேக சாப்பாட்டு அறை, பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன. சச்சின் பிள்ளையார் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே தளத்தில் சச்சின் பெற்ற ஏராளமான விருதுகளை பார்வைக்கு வைப்பதற்கான பிரத்யேக அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. முதல் மாடி சச்சினின் மகன் அர்ஜுன், மகள் சாராவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இந்த மாடியில் தனித்தனி அறைகள் உள்ளன. மேல் மாடி சச்சின் & அஞ்சலி தம்பதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொட்டை மாடியில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தன்று புது பங்களாவில் குடியேற சச்சின் விருப்பப்பட்டார். அதன்படி, குடும்பத்துடன் நேற்று குடியேறினார். முன்பு தங்கியிருந்த வீடு வேறு விளளையாட்டு வீரருக்கு அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். புதிய பங்களாவில் சச்சின் குடியேறியதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார் சச்சின்.
பாந்த்ரா மேற்கு பெரி கிராஸ் ரோடு பகுதியில் ரூ.39 கோடியில் பழைய பங்களாவை வாங்கினார். அதை இடித்து விட்டு 5 மாடிகள் கொண்ட புதிய ஆடம்பர பங்களாவை கட்டியுள்ளார்.
பங்களாவின் முதல் மாடியும், 2வது மாடியின் பாதியும் நிலத்துக்கு கீழ் கட்டப்பட்டுள்ளன. 2வது தளத்தில் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி உள்ளது.
முதல் மாடியில் சமையல் அறை, கண்காணிப்பு அறை மற்றும் வேலைக்காரர்கள் தங்கும் அறைகள் இருக்கின்றன.
தரை தளத்தில் பெரிய வரவேற்பு அறை, சச்சின் குடும்பத்தினரின் பிரத்யேக சாப்பாட்டு அறை, பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன.
தகவல்
தினகரன் நாளிதழ்.
Post a Comment