Header Ads

3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு


 இயற்பியலில் சிறந்து விளங்குவதற்கான இந்த ஆண்டின் நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பெறுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்களின் பட்டியலை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான பரிசுக்குரியவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அமெரிக்காவில் பிறந்த சால் பெர்ல்மட்டர், பிரையன் ஷெமிட், ஆடம் ரீஸ் ஆகிய மூவர் இந்த பரிசை வென்றுள்ளனர். தொலைதூர ஒளிரும் நட்சத்திரத்தை கண்டறிந்ததன் மூலம் பிரபஞ்சத்தின் அளவை அதிகரிக்கும் கண்டுபிடிப்புக்கு உதவியதற்காக இவர்கள் நோபல் பரிசு பெறுகின்றனர்.

வெடித்து சிதறும் நட்சத்திரங்கள், திடீரென பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரங்களை (சூப்பர்நோவா) ஆய்வு செய்ததன் மூலம் உலக பிரபஞ்ச வரைபடத்தை விரிவாக்கம் செய்வதில் இவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். அதற்காக 1990 முதல் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஆராய்ச்சிகள் நடத்தினர். வளி மண்டலத்தில் 50 சூப்பர்நோவாக்கள் வெளியிட்ட ஒளி, எதிர்பார்த்ததைவிட குறைந்த சக்தியுடன் இருந்தது. இது பிரபஞ்சத்தின் விரிவாக்க வேகம் அதிகரித்திருப்பதை காட்டுவதாக இவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சிக்காக பெர்ல்மட்டர் (52), ஷெமிட் (44), ரீஸ் (41) ஆகிய மூவரும் நோபல் பரிசுத் தொகையான ஸி7.35 கோடியை சமமாக பகிர்ந்து கொள்வார்கள். இவர்களுக்கு டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள விழாவில் நோபல் பரிசு வழங்கப்படும். இன்று வேதியலுக்கான நோபல் பரிசும், நாளை இலக்கியத்துக்கான பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.