Header Ads

நவீன கண்புரை அறுவை சிகிச்சை: இத்தாலியில் நேரடி ஒளிபரப்பு

 
 
 
சென்னை தனியார் கண் மருத்துவமனையில் செய்யப்பட்ட "குளூட் ஐ.ஓ.எல்.,' கண்புரை அறுவை சிகிச்சை, இத்தாலியில் உள்ள ரோமில் நடந்த கண் மருத்துவ மாநாட்டில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 60 வயது முதியவருக்கு, இந்த நவீன அறுவை சிகிச்சையை, டாக்டர் அமர் செய்தார்.
ரோமில், "சிக்கலான சூழலில் கண்புரை அறுவை சிகிச்சை' என்ற தலைப்பில் நடத்த இம்மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

டாக்டர் அமர் கூறியதாவது:கண்ணில் லென்சை தாங்கிப் பிடிக்கும் கேப்ஸ்யூல் சேதப்படும்போது அல்லது போதுமான அளவு அது ஒத்துழைக்காத நிலையில், லென்ஸ், அங்கும் இங்கும் நகரக் கூடும். வயோதிகம், கண்ணில் அடிபடுதல் அல்லது பட்டாசு வெடித்து காயம் ஏற்படுதல் போன்ற நிலைகளில், லென்ஸ் நகரும்.இதுபோன்ற நிலையில், குளூட் இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (ஐ.ஓ.எல்.,) பொருத்தி இக்குறையை நிவர்த்தி செய்யலாம். இத்தொழில்நுட்பத்தின்படி, கண்ணில் 2 முதல் 3 மி.மீ., அளவில் சிறிய துளையிட்டு இன்ட்ரா ஆக்குலர் லென்சை புகுத்தி, தையல் இல்லாமல், ஒருவித உயிரி பசை (பைப்ரின்) பயன்படுத்தி, பொருத்தப்படும்.குளூட் ஐ.ஓ.எல்., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மல்டிபோகல் ஐ.ஓ.எல்., அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதனால், சிக்கல் நிறைந்த கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளிகளுக்கு மேம்பட்ட பார்வை கிடைக்கும். இத் தொழில்நுட்பம், "ஆன்டீரியர் செக்மென்ட்' கண் மாற்று அறுவை சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு டாக்டர் அமர் கூறினார்.

No comments

Powered by Blogger.