செல்போன் வரவால் களையிழந்த எஸ்டிடி பூத்களுக்கு மறுவாழ்வு
மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி உட்பட மதுரை ரயில்வே கோட்டத்தில் உளள 105 ரயில் நிலையங்களில் 116 எஸ்டிடி பூத்கள் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. செல்போன்களின் சிக்னல் பிரச்னை தொடர்வதால், சாதாரண தொலைபேசிகளுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது. அதனால் அங்கொன்று இங்கொன்றுமாய் இன்னும் எஸ்டிடி பூத்கள் மிச்சமிருக்கின்றன. பொது மக்கள் கூடும் இடங்களில் ஒன்றான ரயில் நிலையங்களிலும் எஸ்டிடி பூத்கள் இருக்கின்றன.
இதன்தொடர்ச்சியாக மதுரை கோட்டங்களில் உள்ள 105 ரயில் நிலையங்களில் 116 எஸ்டிடி பூத்கள் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் 2 முதல் 7 நடைமேடைகளில் 6 எஸ்டிடி பூத்கள் அமைக்கப்பட உள்ளளன. பூத் ஒன்றுக்கு மாதம் 28,989 ரூபாய் வாடகை. இதேபோல் திருநெல்வேலியில் 3, திண்டுக்கல்லில் 2, விருதுநகரில் 2, கோவில்பட்டியில் 2, தூத்துக்குடி, தென்காசியில் தலா ஒரு எஸ்டிடி பூத்கள் அமைய உள்ளன. இவற்றுக்கு மாதம் தலா ^6,600 வாடகை.
இவை தவிர கடையநல்லூர், மானாமதுரை, புதுக்கோட்டை, பழனி, பரமகுடி, தேனி, உடுமலைப்பேட்டை, திருமங்கலம், கொடை ரோடு ஆகிய 10 ரயில் நிலையங்களில் தலா ஒரு எஸ்டிடி பூத் அமைக்கப்படும். வாடகை மாதம் ரூ.6000. இதேபோல் அக்கரைப்பட்டி, கோட்டையூர், மணப்பாறை, சாத்தூர் உட்பட 77 ரயில் நிலையங்களில் தலா ஒரு எஸ்டிடி பூத் வைக்க அனுமதிக்கப்படும். இவற்றுக்கு மாதம் 3000 ரூபாய் வாடகை.
மேலும் மண்டபம் கேம்ப், மடத்துக்குளம், சங்கரன்கோவில் உட்பட 12 ரயில் நிலையங்களில் தலா ஒரு எஸ்டிடி பூத் அமைக்கப்படும். வாடகை மாதம் ^1000.
குத்தகை காலங்கள் 5 ஆண்டுகள். தினமும் வந்துச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் நிலையங்களின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகை தவிர வைப்புத் தொகையாக ^10,000 கட்ட வேணடும். எஸ்டிடி பூத்தில் பிசிஓ, எஸ்டிடி, ஃபேக்ஸ் வசதி இருக்கும்.
இவற்றில் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்ய மாதந்தோறும் வாடகையுடன் கூடுதலாக ^500 செலுத்த வேணடும். ஒவ்வொரு பூத்தும் 5 அடி அகலம், 6 அடி நீளம் கொண்டவையாக இருக்கும். மாத வாடகை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.
இந்த பூத்கள் பெண்கள், பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் அமைக்கப்படும். எஸ்டிடி பூத் அமைக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் இவர்கள் வேறு வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். இம்மாதத்திற்குள் ஆட்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment