உமிழ்நீர்
உணவானது வயிற்றில் முழுவதும் செரிக்கப்படுவதில்லை. செரிமானத்தின் பாதிவேலை வாயிலேயே முடிந்துவிடுகிறது.வயிற்றிலுள்ள செரிமானத்தின் அமைப்பு வாயில் அரைதுச்செல்லப்ப்படும் உணவினையே செரிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.ஆகவே உண்போர்,உட்கொள்ளும் உணவினை வயிற்றுக்குள் செல்லுமுன்,அது வாயிலேயே நன்றாய் அரைத்து குழைவாக மாற்றி பின்பு வயிற்றினுள் இறங்குமாறு செய்தல் அவசியம்.
நன்றாய் அரைத்து குழைத்து இறங்குவதுற்கு ஏற்பதான் வாயினுள் பற்களும்,உமிழ்நீரும் இயற்கையால் வழங்கப்பட்டுள்ளதை மானிடர்கள் அறிய வேண்டும்
"நொறுங்கத் தின்றால் நூறு வயது"
என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்றே.சிலர் இதை தவறாக பொருள் கொள்ளக்கூடும்.இதன் உண்மை என்னவெனில்,வாயிலேஉணவை நொறுங்க(குழைவாக்கி)வைத்து பாதி வேலையை வாயிலேயே முடித்து இறைப்பைக்கு அனுப்ப வேண்டும்.அதுவே நன்றாக செரிமானம் ஆகும்.அவ்வாறுதான் இயற்கை அமைந்துள்ளது.இயற்கையோடு ஒத்துழைத்து வாழ்ந்தால், உண்டால் நூறு வயது வாழ முடியும்.கோழி விழுங்குவது போல் எந்த உணவை உண்டாலும் செரிமானத்திற்கு கடினப்படும்.மேலும் ஆயுளும் குறையும்.
நோயில்லாமலும்,நூறு வது வாழும் எண்ணம் உடையவர்கள் நொறுங்க உண்டால் வாழலாம்.
பற்கள் உணவினை பிளந்து,பொடியாக்குவதகாகவே உள்ளன.உமிழ்நீர் உணவினை குழைவாக்குவதோடு அதன் கண்உள்ள காடிநீர்,உணவில் உள்ள பசைமாவுப் பொருட்களை சர்க்கரையாக்கி சூட்டினை ஏற்ப்படுத்தி வயிற்றுனுள் செரிக்க எதுவாக தயாராக்கப்படுகிறது.இதுபோன்ற பலத்தன்மைகள் உமிழ்நீரில் உள்ளது.எந்த உணவுப்பொருட்கள் என்றாலும் உமிழ்நீரில் நன்றாக கலந்து அரைத்து வயிற்றினுள் சென்றால் நல்ல செரிமானம் ஆகும்.நோயும் ஏற்படாது.
வயிற்றுப்புண்,வயிற்றுவலி,செரியாமை போன்ற நோய்கள் உணவினை வாயில் உமிழ்நீருடன் சேர்ந்து அறைக்காமையால்தான் ஏற்படுகிறது.எந்த உணவுப் பதார்த்தங்களையும் நன்றாக ரசித்து,சுவைத்து,அரைத்து உண்ணுதல் நலம் பயக்கும். மாறாக விலுங்குவதால் வீணே அவ்வுணவு மலக்குடலில் கழிகிறது.
Post a Comment