Header Ads

பிலிபைன்ஸில் சூறாவளி; சிறு குழந்தை பலி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு


சக்திவாய்ந்த நெசாட் சூறாவளி வட பிலிபைன்ஸை நேற்று தாக்கியது. அத்துடன் இந்த சூறாவளியால் தலைநகர் மனிலாவில் கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மணிக்கு 170 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிவரும் சூறாவளியால் பிலிபைன்ஸில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி காரணமாக சிறு குழந்தை ஒன்று பலியானது. பிலிபைன்ஸின் மத்திய மாகாணமான கடன்டுவான்ஸ் பகுதியில் ஆற்றில் விழுந்து இந்த குழந்தை பலியாகியுள்ளது.

இது தவிர நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூறாவளி அபாயத்துக்கு உள்ளாகியுள்ள மத்திய அபே மாகாணத்தில் ஒரு லட்சத்திற் கும் மேற்பட்டோருக்கு இடம்பெயருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று தலைநகர் மனிலாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. தொடர்ந் தும் காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு பாதைகள் எங்கும் நீர் நிரம் பிக் காணப்படுகிறது. இத னால் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலை கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஓரிரு தினங்கள் பிலிபைன்ஸை தாக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூறாவளி நாளை அளவில் தென் சீன கடற்கரையை எட்டும் என ஹொங்கொங் காலநிலை ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.