Header Ads

கடைசிப் பந்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது மும்பை அணி

சம்பியன்ஸ் லீக் பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில் வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய டிரினிடாட் அணி கைக்கு எட்டிய வாய்ப்பை கோட்டை விட்டது.

இந்தியாவில் மூன்றாவது சம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி – 20’ தொடர் நடக்கிறது. நேற்றுமுன்தினமிரவு நடந்த ‘ஏ பிரிவு லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டிரினிடாட் அண்ட் டுபாகோ (மே. தீவுகள்) அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற டிரினிடாட் அணி தலைவர் டெரன் கங்கா துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

மும்பை பந்து வீச்சில் டிரினிடாட் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. வேகத்தில் மலிங்கவும், சுழலில் தலைவர் ஹர்பஜனும் மிரட்ட விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. மலிங்க பந்தில் பரத் (11) வெளியேறினார். சிம்மன்ஸ் (21), ரன் அவுட்டானார். டெரன் கங்கா (5) சோபிக்கவில்லை.

ஹர்பஜன் வலையில் ராம்தின் (0), டெரன் பிராவோ (18), ஷெர்வின் கங்கா (2) சிக்கினர். மலிங்கா பந்தில் கூப்பா (0) காலியானார். போராடிய முகமது (23), போலார்ட் வேகத்தில் வீழ்ந்தார் டிரினிடாட் அணி 16.2 ஓவரில் 98 ஓட்டங்களுக்கு சுரண்டது. இதன் மூலம் ‘டுவென்டி – 20’ அரங்கில் தனது குறைந்த ஸ்கோரை பெற்றது. தவிர சாம்பியன்ஸ்லீக் வரலாற்றில் 8வது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. மும்பை சார்பில் ஹர்பஜன் 3, மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. பத்ரி பந்தில் பிலிஜார்ட் (2) அவுட்டனார். இதற்கு பின் ராம்போல் மிரட்டினார் இவரது வேகத்தில் சுமன் (10), பிராங்க்ளின் (0), சைமண்ட்ஸ் (0), வெளியேற சிக்கல் ஏற்பட்டது. நரைன் பந்தில் பொலர்ட் (9) போல்டாக மும்பை அணி 5 விக் கெட்டுக்கு 33 ஓட்டங்கள் எடுத்து தத்தளித் தது. பின் ராயுடு சதிஷ் இணைந்து பொறுப்பாக ஆடினர். சதிஷ் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹர்பஜன் (9), ஒரு சிக்சர் அடித்த திருப்தியுடன் வெளியேற மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. இறுதியில் ராயுடு, மலிங்கா துணிச்சலாக போராடினர். கடைசி 6 பந்தில் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஷெர்வின் கங்கா பந்து வீசினார். முதல் பந்தில் ராயுடு ஒரு ஓட்டம் எடுத்தார். 2வது பந்தில் மலிங்க ஒரு ‘சூப்பர் சிக்கர்’ அடித்தார்.

3வது பந்தில் ஒரு ஓட்டம் 4 வது பந்தில் மலிங்கா (15) ஆட்டமிழந்தார். 5வது பந்தில் ராயுவும் (36) ரன் அவுட்டாக டென்ஷன் எகிறியது. கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இம்முறை பந்தை அடித்த சாகல் 2 ஓட்டங்கள் ஓடினார். இவரை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை விக்கெட் காப்பாளர் ராம்தின் கோட்டை விட மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை டிரினிடாட் வீரர் ராம்போல் வென்றார்.

No comments

Powered by Blogger.