Header Ads

எண்ணெய் ஆலையில் காஸ் குழாய் வெடித்து குவைத்தில் 4 தமிழர் பலி


குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 தமிழர்கள் பரிதாபமாக பலியாயினர்.
குவைத்தில் உள்ள 3 பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் மினா அல்அகமதி ஆலையும் ஒன்று. நாள் ஒன்றுக்கு 4.6 லட்சம் பேரல் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலையில் கடந்த வாரம் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள காஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி உடல் கருகி 4 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மினா ஆலையில் உயிரிழந்தவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. அவர்கள் ராஜாராம் லட்சுமையாரெட்டி, லோகாநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராம் அர்ஜூனன் மற்றும் சிவசந்திரன் சண்முகம் என்பதையும் இந்திய தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.

மேலும் இறந்தவர்களுக்கு முறையாக இறுதிச் சடங்கு நடத்துவ தற்காக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். மினா ஆலையின் காஸ் குழாயில் ஏற்பட்ட கசிவால் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது அருகில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் பலியாயினர். விபத்துக்குப்பின் ஆலையில் வழக்கம்போல் பணிகள் தொடர்ந்து நடப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.