Header Ads

குடிமகன்கள் அதிர்ச்சி புதுவை மதுக்கடைகளில் சரக்கு விலை உயர்ந்தது


புதுவையில் பாப்ஸ்கோ மதுபானக்கடையில் சரக்குகளின் விலை ^2 முதல் 30 வரை உயர்ந்துள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறமாநிலங்களை விட புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை குறைவு. இதனால் இங்கு சரக்கு அதிகளவில் விற்பனையாகும். தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து குடித்து விட்டு செல்கிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாக இங்குள்ள கடையிலும் மதுபானங்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. கலால்துறை ஆணையரும், கலெக்டருமான தீபக்குமார் உத்தரவுபடி தற்போது மதுபான உற்பத்தியாளர்கள் மதுபாட்டில்களில் அதிகபட்ச சில்லறை விலையை அச்சிட்டுள்ளனர். 

அதன்படி ஒவ்வொரு கடையிலும் அதிகபட்ச சில்லறை விலைக்கு (எம்ஆர்பி) மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கடையிலும் பழைய இருப்பு இருந்ததால், அக்டோபர் மாதம் வரை பழைய விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம், அதற்கு பிறகு அதிகபட்ச சில்லறை விலைக்கு மதுவை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கலால்துறை துணை ஆணையர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மதுபானக்கடையில் இந்த மாதம் முதல் அதிக பட்ச சில்லறை விலையுடன் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதனால் மதுபானங்களின் விலை ரகங்களுக்கேற்ப குறைந்தபட்சம் ^2ல் இருந்து அதிகபட்சமாக ^30 வரை உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பும் பாப்ஸ்கோ மதுபான கடைகளின் வெளியில் ஒட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.