Header Ads

உப்பில் இத்தனை வகைகளா?

 'உப்பில்லாத பண்டம்  குப்பையிலே' என்கிறோம்.'உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வலியுறுத்துகிறோம்.சுவாரசியமில்லாதவற்றை 'உப்பு சப்பில்லாத விஷயங்கள்'என ஒதுக்குகிறோம்.ஆனால் உப்பில் எத்தனை வகைகள் இருகின்றன என்று ஒருபோதும் தெரிந்து கொண்டதில்லை.                      அந்தக் குறையை போக்குவதற்காக,உங்களுக்குத் தெரிந்த, தெரியாத உப்பு வகைகள் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் இங்கே.....

பாம்பூ சால்ட் 

 கடல்  உப்பை மூங்கில் சிலிண்டர்களுக்குள்,மண் உபயோகித்து,வறுத்துத் தயாரிக்கிற ஒரு வகையான உப்பு இது.மூங்கில் எரிய ஆரம்பிக்கும் போது,உப்பு உருகும்.அப்போது மண்ணில் இருந்த தாதுக்களைக் கிரகித்துக் கொள்ளும்.அசாமில் இந்த வகையான உப்பு பிரபலம்!

 கடல் உப்பு 

கடல்  நீரை ஆவியாக்கி பெறப்படுகிற இது,ஒரே மாதிரி வடிவில் இல்லாமல்  கன்னா பின்னா ஷேப்பில் இருக்கும்.சுவை மற்றும் நிறத்திலும் வேறுபாடும்.பெரிய நட்சத்திர ஓட்டல்களில் பரிமாறப்படும் காஸ்ட்லி உணவுகளில் இதற்கு முக்கிய இடமுண்டு.


ராக்  சால்ட் 

பூமிக்கடியில்  சேர்கிற படிவத்திலிருந்து எடுக்கப்படுகிறது. பெரிய பெரிய கட்டிகளாக பெறப்படும்.கடல் உப்பை விட இதில் தாதுக்கள் குறைவு.சாட் மசாலாவில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.முட்டையில் இதை தூவி சாப்பிடுவது வெளிநாட்டவர் மத்தியில் வெகு பிரசித்தம்.
டேபிள் சால்ட் 

இந்தியாவில் பரவலாக உபயோகிக்கப்படுகிற உப்பு.கடல் நீரிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு சுத்திகரிக்கப்பட்டு தேவையற்ற தாதுப்பொருட்கள் நீக்கப்படுகிறது. சலித்தெடுத்த மணல் மாதிரி அப்படியே சரசரவென கொட்ட,அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.சீக்கிரம் கரையும் என்பதால்,சமையலுக்கும்,பேக்கிரி அயிட்டங்கள் செய்ய இவை உகந்தது.

கோஷர் சால்ட் 

கடல் நீரிலிருந்து எடுக்கப்படுகிற சற்றே கரகரப்பான உப்பு.டேபிள் சால்ட் மாதிரி இல்லாமல் பெரிய துகள்களாக இருக்கும்.உணவில் சேர்த்த பிறகும் தனது கரகரப்புத்  தன்மையை இழக்காமலிருக்கும்.இந்த உப்பின் துகள்கள் பிரமிட் வடிவில் இருக்கும்.மிக மெதுவாகத்தான் கரையும்.


இன்பியூஸ்டு சால்ட் 

 வெனிலா,சாக்லெட்,காபி,மிளகாய்,சில வகை மூலிகைகளை உபயோகித்து பெறப்படுகிற இந்த உப்புக்கு மிகப் பிரம்மாதமான சுவையும், மணமும்,
உண்டாம்.ஐஸ்கிரீம்,இனிப்பு, மற்றும் சூடான பானங்களில் சேர்க்கக் கூடியது.










No comments

Powered by Blogger.