!!!'கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்'!!!
உலகிற்கு முதன் முதலாக தண்டனை சட்டங்களை அறிமுகப்படுத்திய பெருமை மெசபடோமிய மன்னர் ஹாமுராபியைத் தான் சேரும்.
கி.மு.1764-ல் அரியணையில் அமர்ந்த போது இவர் கொண்டு வந்த சட்டங்கள் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.இவரது சட்டப்படி ஒருவரை யாராவது அடித்தால் அடித்தவருக்கு அபராதம் உண்டு.அதுவே வி.ஐ.பி என்றால் அபராதம் அதிகமாகும்.
பெண்ணை கற்பழித்தல்,கடத்துதல்,குழந்தைகளோடு உடலுறவு கொள்ளுதல்,போர்க்களத்தில் பயந்து ஓடுதல்,திருட்டு,வழிப்பறிக் கொள்ளை,லஞ்ச ஊழல்,இவற்றுக்கெல்லாம் நம்ம தலைவர் கொடுத்தது மரண தண்டனை.இது தவிர,பாபிலோனியர்கள் பீர் பிரியர்கள்.பீர் குடிப்பது அவர்களின் முக்கியமான சம்பிரதாயம்.அதனால் பீர் தயாரிப்பாளர்கள் தரமான பீரை தயாரிக்க வேண்டும்.தரம் குறைந்த பீர் தயாரித்தாலும் மரண தண்டனை அளிக்கப்பட்டது.
இப்போதும் உலக நாடுகள் அதிகம் பயன்படுத்தும் 'கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்' என்ற சித்தாந்தம் இவர் கொண்டு வந்ததுதான்.
இதன்படி பெற்றோரை கை நீட்டி மகன் அடித்தால்,அடித்த இடத்திலேயே திருப்பி அடிப்பது தான் அவனுக்கான தண்டனை.
ஒருவரை ஓங்கிக் குத்தி அவர் பல் உடைந்தால்,பதிலுக்கு குத்தியவரின் பல் உடைக்கப்பட்டது.அலட்சியமாக ஆபரேஷன் செய்து நோயாளி இறந்து போனால் டாக்டரின் விரல்கள் வெட்டப்பட்டன.அன்றாட வாழ்க்கை தொடர்பான சட்டங்களும் அப்போது நடைமுறையில் இருந்தன.வீடு கொள்ளையடிக்கப்பட்டு குறித்த காலம் கடந்த பின்பும் காவலர்கள் திருடர்களைப் பிடிக்காவிட்டால் காவலர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.திருடப்பட்ட தொகையை அரசாங்கமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும்.
மனித இனம் தோன்றி வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்கள் அனைத்தும் 1900-ல் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த கால கல்வெட்டு இப்போது பிரான்சின் உலகப்புகழ் பெற்ற லூவர் மியூசியத்தில் உள்ளது.
நல்ல சட்டங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன.
Post a Comment