ஆப்பிளின் ஐ-பேட் 3 அறிமுகம்: ஐ-பேட் 2 விலைக்கே கிடைக்கும்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் புதிய ஐ-பேட்3யை அறிமுகப்படுத்தினார். இந்த ஐ-பேட் உயர் வரையறை தொலைக்காட்சியைவிட ( HD TV) 4 மடங்கு வேகமாகவும் 3டி திறனும் கொண்டுள்ளது. இதன் மூலம் ஐ-பேடில் 3டி விளையாட்டுக்கள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் படங்களை மிகத்தெளிவாகவும், துல்லியமாகவும் பார்க்க முடியும்.
ஆப்பிள் ஐ-பேட்-3 ன் சிறப்பு அம்சங்கள்:
* 5 மெகா பிக்சல் கேமரா
* 2084x1536 ரெசொல்யூஷன்
* ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட திரை
* 40 இன்ச் தொலைக்காட்சியைவிட துல்லியமான திரை
* 3டி விளயாட்டுக்கள்
* 4G மொபைல் நெட்வொர்க்குகள்
இந்த ஐ-பேட்கள் 16ஜிபி மெமரியிலிருந்து கிடைக்கும். மேலும் இதில் இணையத்திற்கு மட்டுமேயான பிரத்யோக வை-பை வசதியை கொண்டுள்ளது.
இந்த ஐ-பேட் வரும் மார்ச் 16 முதல் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ்,பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வரும். 16 ஜிபி மெமரி கொண்ட இந்த ஐ-பேட், 499 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும்.
கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐ-பேட் 2-யின் அதே விலையில் ஐ-பேட்- 3யும் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 9.25 மில்லியன் ஐ பேட்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த ஐ-பேட் 3 விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment