Header Ads

காமெடி படங்களே ஜெயிக்கும் - நடிகர் விவேக்

புதுமுகங்களை வைத்து டி.எஸ். திவாகர் இயக்கும் கஞ்சா கூட்டம் படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. காமெடி நடிகர் விவேக் இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டு பேசியதாவது:-


தமிழ் பேசும் தமிழச்சிகள் கஞ்சா கூட்டம் படத்தில் நாயகிகளாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கு. கதாநாயகர்களும் நம்ம மண்ணுக்காரங்கதான். அவர்களை எல்லோரும் உற்சாகப்படுத்தனும். சின்னதா ஆரம்பிச்ச படங்கள் பெரிய லெவலுக்கு போய் வசூலை கொட்டி இருக்கு. நிறைய செலவு செய்து எடுத்த படங்கள் கீழே விழுந்திருக்கு.


எனவே புதுமுகங்கள் நடிச்ச படம்னு எதையும் ஒதுக்க முடியாது. திறமை எங்கிருந்தாலும் வரவேற்பது தமிழன் பண்பு. எந்த மொழி, எந்த இனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் பாராட்டுவான். முன்பெல்லாம் ஒரு படத்தை 4 தியேட்டரில் திரையிட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள். இப்ப ஒரு படத்தை 100 தியேட்டரில் திரையிட்டு 4 நாட்கள் ஓட்டுறாங்க.


சினிமா ரேஸ்மாதிரி அது சுத்திக்கிட்டே இருக்கனும் 50-வது நாள் வெள்ளி விழா 100-வது நாள் விழா என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கொண்டாடனும் அப்ப தான் சினிமா செழிப்பா இருக்கும். இன்றைக்கு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஹிட்டாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெறாது என்றும் சொல்ல முடியாது.


நல்ல கதையும், காமெடியும் இருந்தால் படம் ஜெயிச் சிடும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி அதுபோல் இன்னொரு மறைமுக சூப்பர் ஸ்டாரும் இருக்கார். அதுதான் திருவாளர். நகைச்சுவை, காமெடி படத்தில் இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகும். சினிமாவில் கஷ்டப்பட்டா நிச்சயம் ஜெயிக்கலாம். ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் சுற்றிக் கொண்டிருக்கிற உருண்டையை பார்த்து நாம் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழைய முடியுமா என்று ஏங்கியவர் பாலச்சந்தர் அவர்தான் தாதா சாகேப் பால்கே அவார்டை பெற்றார். எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தளராமல் தொடர்ந்து போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.


விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசும் போது தியேட்டர்களில் சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். முன்னாள் எம்.பி. செந்தில், இயக்குனர்கள் மு.களஞ்சியம், ராதாரவி, நடிகை லியாஸ்ரீ கஞ்சா கூட்டம் பட நடிகர்கள் லங்கா, வினோ, ஸ்ரீதேவி, ஷக்தி, டிக்சன், தயாரிப்பாளர்கள் விஜயகுமாரி, குமரன், பாலாஜி, பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.