ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சாமியார் வேடம்: நித்யானந்தாவை அவமதிக்கும் காட்சியா? - இயக்குனர் ராஜேஷ் விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜீவாவை வைத்து சிவா மனசில சக்தி, ஆர்யா நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை டைரக்டு செய்தவர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உளுந்தூர் பேட்டை உலகானந்தா என்ற பெயரில் சாமியார் கேரக்டர் இடம் பெற்றுள்ளது.
இந்த வேடத்தில் சாமிநாதன் நடித்துள்ளார். காதலில் தோல்வி அடைந்தவர்கள் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு ஆன்மீக பழம் தருகிறேன் என்று வசனம் பேசுவது போல் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டர் நித்யானந்தா சாமியாரை கேலி செய்வது போல் உள்ளது என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இதுபற்றி இயக்குனர் ராஜேஷிடம் கேட்ட போது, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இடம் பெறும் உளுந்தூர்பேட்டை உலகானந்தா சாமிகள் என்ற கேரக்டர் ஒரு கற்பனை கதாபாத்திரம் எந்த சாமியாரையும் குறிப்பிடுவது அல்ல காதலில் தோல்வி அடைந்தவர்களை ஆன்மீகத்துக்கு அழைப்பது போல் நகைச்சுவையாக அந்த பாத்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறும் போது இளைஞர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு படமாக இதை எடுத்துள்ளேன். படம் பார்த்து சந்தோஷமாக சிரித்து விட்டு வரலாம். உதயநிதியும், ஹன்சிகாவும் சிறப்பாக நடித்துள்ளனர் என்றார்.
Post a Comment