சிறுகதை
கேட்காமலே!....
மீதமிருப்பது முழுசாய் 50 நிமிடங்கள் மட்டுமே இன்னமும் 40.000/-வேண்டும்...முடிந்ததை புரட்டியாச்சு.எல்லோரிடமும் கேட்டாச்சி.
உனக்குத்தான் இந்த காண்டிராக்ட்.நாளை காலை 11.30 மணிக்கு 'டெப்பாசிட்' தொகையுடன் வந்து விடு.இனி உன் கம்பெனிக்கு ஆள் பத்தாது...இடம் பத்தாது...பெரிய ஆளாய் மாறப்போகிறாய்...புது மாப்பிள்ளை வேற...கலியாணம் ஆன கையோட யோகம் நீ இனி பெரிய ஆளாக மாறப்போகிறாய்.பில் செட்டில்மெண்டை எல்லாம் நான் பார்த்துக்கறேன்.எத்தனை நம்பிக்கையான வார்த்தைகள்.என்றோ ஒரு நாள் நான் செய்த உதவிக்கு இத்தனை தூரம் இறங்கி வந்து கைகொடுக்க முன்வந்தும் என்னால் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லையே கண்களை மூடி கவிழ்ந்திருந்தேன்.
'பொன்மகள் வந்தால்'...பொருத்தமில்லா பாட்டு FM-ல் ஒலித்துக்கொண்டிருக்க ஆபீஸ் ஸ்டெனோ இடைமறித்தாள்.சன்னமான குறலில் வரச்சொல் என்றேன் நிமிராமலேயே!...
மெதுவாக கண் திறந்தேன் கட்டுக்கட்டாய் காந்தி சிரித்தார்...ஒரு நாற்பது ஐம்பது தேறும்..விழிகள் விரிய பார்வை வீசினேன்.மஞ்சள் கயிற்றுடன் மட்டும்...மங்களமாய் மின்னினாள் என் தங்கலெட்சுமி.
படைப்பு
ச.பரமேஸ்வரன்
கணித ஆசிரியர்
பா.தொ.ந.உ.கழக
மேல்நிலைப்பள்ளி
விக்கிரமசிங்கபுரம்
திருநெல்வேலி.
Admin:-
தங்களது படைப்புக்கு மிக்க நன்றி.தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
Post a Comment