மைக்கேல் ஜாக்சனின் குரங்கு
பணக்கார வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களைப் பார்த்திருப்போம். ஒரு மனிதனை விட அந்த நாய்க்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.வீட்டில் ஷோபாவில் படுத்துக்கொள்ளும், காரில் பயணம் செய்யும்.கறி என்ன விலை விற்றாலும் அதற்கென்று தனியாக கறி சமைத்து கொடுப்பார்கள்.பிறந்தாலும் பணக்கார வீட்டில் நாயாக பிறக்க வேண்டும் என்றும்,ஏங்குவார்கள் அந்த வீட்டில் வேலை செய்யும் மனிதர்கள்.
இதைப்போல தான் மைக்கேல் ஜாக்சன் வீட்டில் ஒரு குரங்கு வளர்ந்து வந்தது.இந்த குரங்கை பார்த்த எல்லோருமே மைக்கேல் ஜாக்சன் வீட்டில் குரங்காக பிறக்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டார்கள்.ஏனென்றால் இன்றைக்கு உலகில் இருக்கும் குரங்குகளிலே மிகவும் பணக்கார குரங்கு இதுதான்.
தனது பிரியத்திற்குரிய 'பபிள்ஸ்' என்ற இந்த சிம்பன்சிக்கு மைக்கேல் ஜாக்சன் 20 லட்சம் அமெரிக்க டாலருக்கான சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்.
ஒரு காலத்தில் இது மைக்கேலுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்று வரும். அவருடன் உரிமையுடன் விளையாடும்.டைனிங் டேபிளில் சமமாக உட்கார்ந்து சாப்பிடும்.மைக்கேலின் பெட்ரூமிர்க்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை.அங்கேயும் உரிமையோடு நுழைய அனுமதி பெற்ற ஒரே ஜீவன் பபிள்ஸ் தான்.
மைக்கேல் இசை நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குப் பறக்கும் போதும் அவரோடு சேர்ந்து பறக்கும் அளவிற்கு பபிள்ஸ் மீது பிரியம் வைத்திருந்தார்.அப்படி இணைந்திருந்த இவர்களுக்குள்ளும் பிரிவு வந்தது.
மைக்கேலுக்கு குழந்தை பிறந்த போது இந்த குறும்பு குரங்கு,குழந்தையை எதுவும் செய்து விடக்கூடாது என்று பயந்து போன மைக்கேல்,புளோரிடாவில் உள்ள ஒரு காப்பகத்திடம் ஒப்படைத்தார்.அதை பராமரிக்க மாதந்தோறும் பணம் கொடுத்து பார்த்து வந்தார்.
இறப்புக்கு முன் தனது உயிலில் பபிள்சுக்கும் ஒரு பங்கு எழுதி வைத்திருந்தார். காப்பகத்தில் மிகவும் சாமர்த்தியமாக இருக்கும் பபிள்சுக்கு இன்னமும் கூட ஜாக்சன் இறந்த விஷயம் தெரியாதாம்.....!
Post a Comment