Header Ads

கவிதை முத்துக்கள்


தாயினும்
தாலாட்டும்
சிறந்த ஆசிரியர்கள்.

மாணவர்களின் பார்வை
அர்த்த நாரீஸ்வரராக
துடிக்கிறது.

மனதில்
ரணகளத்துடன்
மாணவிகள்.

மூன்று முக்கிலும்
நூலாம்படையில்
எட்டு கால் பூச்சிகளின் நடனம்.

தன் கடமையை
சரியாக செய்யும் இரண்டு
மின்விசிறிகள்.

இப்படியாக
'ஒளி'வீச துடிக்கும்
எங்களின்
எதிர்காலம்
இந்த
''வகுப்பறை''




விந்தை


அறிவியல்
உலகத்தில்
தமிழ்
பெண் ஒருத்தி
சோசியலாக
பழகினால் சமூகம்
கணக்கு
போட்டு பார்த்தது 
அவள்
ஆங்கில 
பெண் என்று.


காதலர் உள்ளம்


தோண்ட தோண்ட 
போய்க் கொண்டிருக்கும்
'புதைக் குழி'


ஆற்று வெள்ளத்தில் 
அடித்து செல்லப்பட்ட 
'கூழாங்கல்'


கனத்த மழையில்
கரைந்து போன 
'செம்மண் சுவர்'


புயல் அடித்த போது
உடைந்து போன
'குடிசை'
காதலர் உள்ளம்.


ஹைக்கூ 

வறுமை

உண்ண
அரிசியில்லை 
கடைசியில் 
'வாய்க்கரிசி'.

மொட்டுகள்
பூ,
விற்கிறது 
சாலையில்.

லஞ்சம்

ஆளுங்கட்சிக்கு 
வளர்பிறை 
எதிர்கட்சிக்கு 
தேய்பிறை.

'மழை'

மனிதனைப் பார்த்து 
தெய்வமிடும்
'கண்ணீர்'





படைப்பு 

கோ.சங்கரசுப்ரமணியன் 
ஓவிய ஆசிரியர்
பா.தொ.ந.உ.கழக
மேல்நிலைப்பள்ளி 
விக்கிரமசிங்கபுரம்
திருநெல்வேலி .

Admin:

தங்களது படைப்பிற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் மேலும் தங்களது சிறந்த படைப்புகளை வரவேற்கிறோம்.

No comments

Powered by Blogger.