Header Ads

மீண்டும் இந்தியா

நல்ல வேலை, சூப்பர் சம்பளம் என அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு போனவர்கள், தாயகம் திரும்புகிறார்கள். மோசமான பொருளாதார நிலையால் அந்த நாடுகளில் வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு சம்பளமும் குறைந்து வருகிறது. இதனால் போதும் வெளிநாட்டு வேலை என உதறிவிட்டு இந்தியா திரும¢புகிறார்கள் என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாப்ட்வேர் நிபுணர்கள், விஞ்ஞானிகள் என கூட்டம் கூட்டமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி என வெளிநாட்டு வேலைக்கு படையெடுத்தது ஒரு காலம். அவர்கள் அங்கேயே செட்டிலாகி அடுத்த தலைமுறையினர், அந்த நாட்டு குடிமகன்களாகவே மாறிவிட்டனர். அவர்களுக்கும் அடுத்தடுத்து வெளிநாடு போனவர்களுக்கும் இப்போது பிரச்னை. காரணம் அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. 

100 பேர் வேலை பார்த்த இடத்தில் 50 பேர் இருந்தால் போதும் என்ற நிலை. ஆட்குறைப்பில் சிக்கிய வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியா திரும்பத் தொடங்கியுள்ளனர். இப்படி திரும்பும் நிபுணர்களுக்கு இந்திய நிறுவனங்கள் நல்ல சம்பளம் கொடுத்து சேர்த்துக் கொள்கின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பான வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. அதோடு வெளிநாட்டு சம்பளத்துக்கும் இங்கு கிடைக்கும் சம்பளத்துக்கும் உள்ள இடைவெளியும் பெரிதும் குறைந்துள்ளது. இதுவும் என்ஆர்ஐக்கள் இந்தியா திரும்ப முக்கிய காரணம் என்கிறது ஆய்வு.

ஐ.டி. ஊழியர்களும், இன்ஜினியரிங், வங்கித் துறை, நிதித்துறை, டெலிகாம் துறை, ஆட்டோமொபைல் துறை ஊழியர்களும் அதிகம் தாயகம் திரும்புகின்றனர். இவர்களை இந்திய நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவது 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவர்களில் பலர் கிளைமேட் காரணமாக பெங்களூரில் செட்டிலாவதைத்தான் விரும்புகிறார்களாம். மும்பை, டெல்லி, ஹைதராபாத் அவர்களின் அடுத்தடுத்த சாய்ஸ். வெளிநாடுகளில் சம்பளம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகம். இந்தியாவில் சம்பளம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் செலவு மிகவும் குறைவு என்பதால் சம்பள வித்தியாசத்தை பொருட்படுத்துவதில்லை என்கிறது சர்வே.

No comments

Powered by Blogger.