Header Ads

உயிரே உன் விலை என்ன?

             

''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது''

என்று சொன்னார் அவ்வை மூதாட்டி. இந்த அரிதான மானிடப் பிறவியின் அருமையை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை.


தற்கொலை


இந்த பிரபஞ்சத்தில், எந்த கோள்களிலும் அமையப்பெறாத பரிணாம வளர்ச்சியின் உச்சமாக,சிரித்து வாழக்கூடிய, உணர்ச்சிகள் நிறைந்த, எதையும் பகுத்தறியக்கூடிய 6-வது அறிவை பெற்ற நாம், நமது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் தற்கொலைப் போக்கு நாளுக்கு நாள் நாட்டுக்கு நாடு அதிகரித்து வருகிறது. 


இதற்கு என்ன காரணம்?,

முதலில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதது ஒரு காரணம்.இரண்டாவது,சில மதிகெட்டவர்களின் மன நிலை கெடுதல்.மூன்றாவது,மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளுதல் போல் அழித்துக் கொள்ளுதலும் இயற்கையான செயல் என்று எண்ணுவது.

காரணங்கள்


                  அச்சம், கவலை, பற்றாகுறை, தாழ்வு மனப்பான்மை, விரோதம், குற்ற உணர்வு,விவாகரத்து, குடும்ப உறவுகளை அழித்தல், விலைவாசி, பொருளாதார நெருக்கடி, போதைப் பழக்கம், பால் உறவின் தவறான வழி, இளங்குற்றவாளி,பித்துப்பிடித்தல்,நோய், இவை அனைத்தும் பல நேரத்தில் தற்கொலையில் முடிகிறது.வயிற்று வலி, வறுமை, தேர்வில் தோல்வி, ஆசிரியர் திட்டுதல், பெற்றோர் திட்டுதல், அவமானம், ஈவ்டீசிங், அடக்குமுறை, கடன் தொல்லை,வியாபாரத்தில் தோல்வி, காதல் தோல்வி, கள்ளக் காதல், மணமுறிவு,திருமண ஏக்கம், குழந்தை இல்லாத ஏக்கம், குடும்ப பிரச்சனை, வரதட்சணை கொடுமை, இப்படி பல்வேறு காரணங்களாலும், தற்கொலைகள் நடக்கின்றன.

ஈவ்டீசிங்


நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் பெண்கள்,மாணவிகள் ஈவ்டீசிங் கொடுமைக்கு ஆளாகின்றனர்.அவர்களில் 5 சதவீதம் பேர் வெளியில் சொல்ல முடியாத துயரங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கள்ளக் காதல்


கள்ளக் காதலால் வாழ்கையை முடித்துக் கொள்வோரும் பெருகி வருகிறார்கள்.அவர்கள் மன நல நிபுணரிடம் தக்க ஆலோசனை பெற்றால் தற்கொலைகளை தடுக்கலாம்.

''தற்க்காத்து தற்கொண்டாற் பேணி'' என்ற குறள் வரிக்கேற்ப ஆணும்,
பெண்ணும் கற்பு நெறியோடு வாழ வேண்டும்.


நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.
சாகப் பிறந்தவர்கள் அல்ல.

தவிர்க்கும் வழிவகைகள்


பொதுவாக தற்கொலை எண்ணம் ஏற்படும் ஒருவரை நன்கு கவனிக்க வேண்டும்.அவர்களுக்கு சிறந்த நட்பை ஏற்படுத்த வேண்டும்.எந்த பிரச்சனைக்கும் பேச்சிவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்.அடிக்கடி மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை வழங்கினால் சமூகத்தையே காப்பாற்ற முடியும்.


தியானம்,மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுதல்,தன்னம்பிக்கையை வளர்த்தல்,பிரச்சனைகளை கையாளும் திறன்,சமூகத்தின் போக்கு பற்றிய அறிவு,மனதிற்கு ஓய்வு கொடுத்தல்,ஆகியவற்றின் மூலமும் தற்கொலைகளை தடுக்கலாம்.


''என் கடன் பணி செய்து கிடப்பதே;


என்று வீட்டுக்காகவும்,நாட்டுக்காகவும் தன்னை அற்பணித்தவர்களின் வாழ்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டு வலிமை பெற வேண்டும்.அந்த வலிமை வாழ்க்கையை வளமாக்கும்.

உயிரே உன் விலை என்ன? என்பதை சிந்திப்போமாக!


தகவல்
சி.குணசேகரன்,
ஆசிரியர்,
அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி,
உடையார் பாளையம்,
அரியலூர்.

No comments

Powered by Blogger.