விந்தைத் தகவல்கள் (பகுதி-1)
சில விந்தைத் தகவல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
- எறும்புகள் தூங்குவதில்லை.
- கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
- உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது.
- ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது.
- ஈ என்ற ஒலியுடன் முடியும் சொற்களுக்கு பூனைகள் உடனே செவிமடுக்கும்.
- பூனைகளால் நூறு விதமாக ஒலியெழுப்ப முடியும்.
- நாய்களால் பத்து விதமாக ஒலியெழுப்ப முடியும்.
- கரப்பான் பூச்சியால் ஒன்பது நாள்கள் தலை இல்லாமல் வாழ முடியும்.அதன் பின்னரே பசியால் செத்துப் போகும்.
- ஒரு மரம்கொத்தியால் ஒரு நொடியில் இருபது முறை மரத்தைக் கொத்த முடியும்.
- பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.
- பாலூட்டிகளின் இரத்தம் சிவப்பு,பூச்சிகளின் இரத்தம் மஞ்சள்,நீர்வாழ் உயிரினங்களின் இரத்தம் நீள நிறமுடையது.
- எறும்புகள் 16 வருடம் வரை வாழக் கூடியவை.
- எறும்பின் வாசனை நுகரும் சக்தி,நாயின் மோப்பச் சக்திக்கு ஒப்பானது.
- பன்றிகளால் அண்ணாந்து பார்க்க முடியாது.
- முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
- ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும்.
- பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.
- பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.
- யானைகளால் குதிக்க முடியாது.
- மாகரெல் என்ற மீன் வகை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை இடும்.
- ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
- கடல் ஆமைகளில் ஆயிரத்தில் ஒன்று தான் குஞ்சு பொறித்தபின் உயிர் வாழும்.
- ஒட்டகங்களால் உமிழ் நீரை துப்ப முடியும்.
- நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.
Post a Comment