Header Ads

''யோகிஸ் அறக்கட்டளை'' நோக்கம்

           
                       உலகிற்கு தொடர்ந்து ஞானத்தை வழங்கி ஒளிவீசக் கூடியது நம் பாரதம்.பல்வேறு மகான்கள் தோன்றி,மக்களிடையே ஆன்மீகத்தை பரப்பி வருகின்றனர்.இந்திய மக்களில் பலரும் ஆன்மீகத்தை சார்ந்தும் இருக்கின்றனர்.தற்போது சந்தையில் 'ஆன்மிக' வியாபாரம் நன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது.பழம் ஞானிகள் வகுத்தளித்த பயிற்சி முறைகளையும்,ஞானக் களஞ்சியத்தையும் தற்போது உள்ள பயிற்சிக் கூடங்கள் விற்று பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது.ஒழுக்க பழக்கங்களில் சிறந்து விளங்கிய பிறகு கற்று தந்த யோக நுணுக்கங்கள்,தற்போது யார் பணம் கட்டினாலும் கிடைத்து விடுகிறது.இது பலனற்ற விதையாகவே போய் விடுகிறது.இதை தவிர்த்து பலமையான ஞானக் கருத்துகளை இன்றைய தலைமுறையினருக்கு எவ்வித கட்டணமும் இன்றி,தகுதிக்கேற்ப வழங்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு தான் ''யோகிஸ் அறக்கட்டளை''. 

No comments

Powered by Blogger.